மணிரத்னத்தை தவிர தமிழ் சினிமாவின் எல்லா இயக்குனர்களும் அரிதாரம் பூசிவிட்டார்கள். மணிரத்னத்தின் துணைக்கு இதுவரை கரு. பழனியப்பன், லிங்குசாமி என சொற்ப இயக்குனர்களே இருந்தனர். அதில் ஒரு டிக்கெட் காலி. கரு. பழனியப்பனும் விரைவில் நடிக்கிறார்.
பிரிவோம் சந்திப்போம் வெளியானபோது, கரு. பழனியப்பனை வளைத்து வளைத்து கேள்வி கேட்டனர். பிரதான கேள்வி, நீங்கள் நடிப்பீர்களா? ரொம்பத் தெளிவாக தடுமாற்றம் இல்லாமல் சொன்னார், 'அது என்னுடைய வேலை இல்லை!'
இப்போது என்ன ஆனதோ, இயக்குனராக இருந்து நடிகரான இரண்டு டஜன் இயக்குனர்களுடன் கரு. பழனியப்பனும் இணைகிறார்.
அவரே இயக்கி நடிக்கும் படமா? அல்லது வெளி இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா என்ற ரகசியத்தை சொல்ல மறுக்கிறார். அதேநேரம், நாள் தவறாமல் ஜிம் சென்று உடம்பை ஷேப் செய்து வருகிறார். நீங்கள் ஹீரோ என்றால் ஹீரோயின் யார், சினேகாதானே?