வித்தைகள் பல கற்றிருந்தாலும் உயர் தொழில்நுட்பத்தில் ஒரு படம் பண்ணுவதென்றால், ஹாலிவுட்டை நோக்கியே ஓட வேண்டியிருக்கிறது.
போருக்கான வேகத்துடனும், அமைதிக்கான நிதானத்துடனும் ரோபோ வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படம் முழுக்க கிராஃபிக்ஸ் வேலைகள் இருப்பதால் அதுகுறித்து தெரிந்துகொள்ள ஒரு டீம் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது.
இன்னும் சில தினங்களில் ஷங்கரும், ரஜினியும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள். ரோபோவில் ரஜினி தோன்றும் பல்வேறு கெட்டப்புகளுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தவே இந்த ஹாலிவுட் பயணமாம்.
சிவாஜியில் பார்த்ததைவிட மேலும் சில வயதுகள் குறைந்து மேலும் இளமையாக ரஜினியை காண்பிக்க முடியுமா என்ற சோதனையும் இந்த அமெரிக்கப் பயணத்தில் மேற்கொள்ளப்படுமாம்.
பார்த்து... ரொம்பவும் இளமையானால் அடையாளம் தெரியாமல் இருந்துவிடப் போகிறது.