கல்யாணப் பெண் கனிகா!

வெள்ளி, 16 மே 2008 (19:34 IST)
webdunia photoFILE
ஃபைவ் ஸ்டார் வெளிவந்த போது மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். களையான முகம், கனிவான தமிழ் பேச்சு இரண்டும் இருந்தும் கனிகா எனும் தமிழச்சியை கண்டுகொள்ள மறுத்தது தமிழ் சினிமா.

மலையாளம் கனிகாவுக்கு கை கொடுத்தது. தற்போது மம்முட்டியுடன் பழஸி ராஜா மலையாளப் படத்தில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் நமிதா, நயன்தாரா வகையறாக்களுக்குதான் மதிப்பு என்பதை கனிகா உணர்ந்து கொண்டார் போல. புத்திசாலித்தனமாக திருமணமாகி செட்டிலாக முடிவெடுத்துள்ளார். மணமகன், அமெரிக்காவில் பணிபுரியும் சாஃப்ட்வேர் என்ஜினியர். பெயர் ஷியாம் ராமகிருஷ்ணன்.

அடுத்த மாதம் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் திருமண விழாவில் கனிகா திருமதியாகிறார்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்