பாலாஜி சக்திவேல், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸுக்காக இயக்கும் படத்தில் முழுக்க புதுமுகங்களே நடிக்கிறார்களாம்.
திருப்பதி பிரதர்ஸின் இன்னொரு தயாரிப்பிலும் புதுமுகங்களுக்கே முதல் மரியாதை.
இயக்குனர் பிரியதர்ஷனிடம் அசிஸ்டெண்ட்டாக இருந்த பிரபு, ரோஹன் கிருஷ்ணா என்ற பெயரில் (இது இயக்குனரின் பெயர்) ஒரு படம் இயக்குகிறார். படத்தின் பெயர் பட்டாளம். பெயரைப் போலவே ஒரு பட்டாளம் புதுமுகங்கள் - எல்லோருமே மாணவர்கள் - இதில் நடிக்கிறார்கள்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
கோடை விடுமுறையில் இருப்பவர்கள் ரோஹன் கிருஷ்ணாவைப் பார்த்தால், பார்ட் டைமாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் யாரை எப்போது அடிக்கும் என்று யாருக்குத் தெரியும்!