சொல்ல சொல்ல இனிக்கும் பூஜை!

புதன், 14 மே 2008 (19:30 IST)
இன்று ஏவி.எம். பிள்ளையார் கோவிலில் சொல்ல சொல்ல இனிக்கும் படத்தின் தொடக்க விழா. அறிந்தும் அறியாமலும் நவ்தீப் படத்தின் நாயகன். அறை எண் 305ல் கடவுளில் நடித்த மதுமிதா நாயகி.

காதல் கதையான சொல்ல சொல்ல இனிக்கும் படத்தை ஜி. முரளி அப்பாஸ் இயக்குகிறார். வெயில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மதி கேமரா. படத்தை இயக்குவதுடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் முரளி அப்பாஸே எழுதுகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கப் போவது பாடல்கள். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவர் பரத்வாஜ்.

உதயநிதி ஸ்டாலின், ராம. நாராயணன் என படா தலைகளெல்லாம் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்