நடிகர் ரகுவரனின் திடீர் மறைவு அனைவரது மனங்களையும் பாதித்துள்ளது. மனங்களை பாதித்த அதே அளவுக்கு அவர் நடித்த படங்களையும் பாதித்துள்ளது.
ரகுவரன் 'இந்திரா விழா'வில் நடிப்பதாக இருந்தது. அவரது திடீர் மறைவால் அந்த வேடத்தில் நாசர் நடித்துக் கொண்டிருக்கிறார். ரகுவரன் இந்திரா விழாவில் நடிக்காததால் நாசர் அவருக்குப் பதில் நடிக்கிறார். அதே நேரம், பாதி காட்சிகளில் ரகுவரன் நடித்திருந்தால்?
இப்படியொரு சிக்கல் 'அடடா என்ன அழகு' படத்துக்கு. ஜெய் ஆகாஷ், நிக்கோல் நடிக்கும் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷின் அப்பாவாக சில காட்சிகள் நடித்தார் ரகுவரன். அவரது திடீர் மறைவால் அப்பா கதாபாத்திரத்தை மேலும் தொடர முடியாத, படத்திலிருந்து முழுமையாக தூக்க முடியாத இரண்டும் கெட்டான் நிலைமை.
பார்த்தார் இயக்குனர் ஜெயமுருகன். வசனங்களை மாற்றி, ஜெய் ஆகாஷின் அப்பா ரகுவரனை, அவரது மாமாவாக்கிவிட்டார். கதைக்கு இது பொருத்தமாக அமைந்துவிட்டதாம். இப்போது ஜெய் ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு நடித்து வருகிறார்.