நான் கர்த்தரின் மகள் - கலங்கடிக்கும் நடிகை!

புதன், 14 மே 2008 (19:22 IST)
அவர் வாய் திறந்தால் பைபிள் வசனங்கள் பொழிகிறது. நெஞ்சிலும், நினைப்பிலும் ஏசு... ஏசு... ஏசு...

யார்ரா அந்த உபதேசி என்று கோயம்பேடு சென்றால், நமது கைப்பிடி இதயத்தை கத்ரினா புயல். "நான் பல சூப்பர் ஸ்டார்களோடு நடித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய உண்மையான சூப்பர் ஸ்டார் ஏசு மட்டுமே!"

மேடையில் முழங்கிக் கொண்டிருந்தவர், தனது கவர்ச்சியில் கேப்டன் கங்கூலியையே எகிற வைத்த நக்மா.

அவர் அரசியலில் இருந்தபோது நிறைய நெருக்கடிகளாம். தற்கொலை எண்ணம் அடிக்கடி வந்ததாம். அப்போது ஏதேச்சையாக பைபிள் படிக்க, அப்படியே அதில் ஒன்றிப் போனாராம். பிரச்சனைகளும் பஞ்சாகப் பறந்துவிட, நான் கர்த்தரின் மகள், அவர் புகழை பரப்புவதுதான் என்னுடைய வேலை என்று சென்னை வரை பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்.

அழிவு நெருங்கும் போது உலகில் அதிசயங்களை காண்பீர் என பைபிள் சொல்கிறது. கர்த்தரே... அந்த அதிசயம் இதுதானா!

வெப்துனியாவைப் படிக்கவும்