நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயகாந்திற்கு ஒரு வெற்றிப் படம். அதிலும் அரசாங்கம் நூற்றி ஐம்பதாவது படம் என்பதால் கேப்டனின் சந்தோஷத்துக்கு அளவில்லை.
அரசாங்கத்துக்கு அடுத்து எங்கள் ஆசான் படத்தில் நடித்து வருகிறார் விஜயகாந்த். கலைமணி இயக்கம். பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அரசாங்கம் தனது 150வது படம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்த எங்கள் ஆசான் யூனிட்டுக்கு அரசாங்கம் வெளியான ஒன்பதாம் தேதி பிரியாணி விருந்து கொடுத்தார் விஜயகாந்த்.
படத்தின் நூறாவது நாளில் இன்றும் பெரிய விருந்தை விஜயகாந்திடம் எதிர்பார்க்கலாம்!