தெலுங்கில் கெளதம் வாசுதேவ மேனன்!

செவ்வாய், 13 மே 2008 (13:34 IST)
தனது விருப்ப நடிகர் பட்டியலிலிருந்து விஜயை நீக்கிவிட்டார் கெளதம். ராடான நிறுவனத்துக்காக சரத்குமாரை வைத்து இயக்குவதாக இருந்த திட்டமும் காலாவதியாகிவிட்டது. அப்படியானால், வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு யாரை வைத்து இயக்குகிறார் கெளதம்?

இந்தக் கேள்விக்கான விடை த்ரிஷா! வாரணம் ஆயிரம் முடிந்ததும், த்ரிஷாவை வைத்து தொடங்கிய சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்குகிறார் கெளதம்.

அதன்பிறகு யு டிவிக்காக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை இயக்குகிறார். காக்க காக்க படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க, கர்ஜனா என்ற பெயரில் ஏற்கனவே இயக்கியிருக்கிறார் கெளதம். மகேஷ் பாபு படம் இரண்டாவது.

கெளதமின் அடுத்த குறி பாலிவுட்டாம். அங்கும் சாதிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்