சென்னை 6000028 படத்தை தயாரித்து அரை டஜன் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை திறந்து வைத்த எஸ்.பி.பி. சரண், அடுத்த தயாரிப்பை முடிவு செய்துவிட்டார்.
முந்தையப் படத்தைப் போலவே புதிய படத்துக்கும் வித்தியாசமான தலைப்பு, குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும். மறைந்த நடிகர் சந்திபாபுவின் புகழ்பெற்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் தலைப்பு.
சரணின் கேப்பிட்டல் ·பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜமோகன் இயக்குகிறார். புதுமுகத்தை ஹீரோயினாக நடிக்க வைப்பது என்ற முடிவோடு சென்னை சிட்டியை சல்லடைப் போட்டு சலித்து தான்யாவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தான்யா இரண்டாம் வருட டெண்ட்டல் கல்லூரி மாணவி. நடிப்பு என்றதும் அய்யோ என்று விலகியவரை தயாரிப்பாளரும், இயக்குனரும் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர்.
அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நாகர்கோவிலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.