எள் போட்டால் எண்ணெயாகிவிடும். அந்தளவு கூட்டம். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன், தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் என எங்கு நோக்கினாலும் வி.ஐ.பி.கள்.
நிறைகுடமாக ததும்பிய அந்த விழா ஹரியின் 'சேவல்' படத்தின் தொடக்க விழா.
இது என்னுடைய ஒன்பதாவது படம் என்று தொடங்கிய ஹரி, படத்தின் ஒன்லைன், நெல்லை தமிழ் பேசும் பரத் என படம் குறித்து ஒரு சித்திரத்தை தந்தார். அதில் கவர்ந்தது சிம்ரன் பற்றிய சேதி. எனக்கு இது ரொம்ப நல்ல வேடம். நடிப்பில் ஹீரோ பரத்தை தூக்கி சாப்பிடுவேன் என்றாராம் சிம்ஸ்.
பரத் பேசும்போது, சிம்ரனை தூக்கி சாப்பிவேன் என்றார் ஹாஸ்யமாக. யப்பா, யார் சாப்பிட்டாலும் நமக்கு ஒரு பங்கு கொடுங்க, என்று இன்ஸ்டண்ட் கமெண்ட் அடித்தார் அருகிலிருந்தவர்.
தொடக்க விழா நடத்திய கையோடு அனைவரையும் ஓட்டிக்கொண்டு ஷூட்டிங் சென்றுவிட்டார் ஹரி. விரைவில் சேவலின் குரலை திரையில் பார்க்கலாம்.