மார்க்கெட் தொய்வடையும் போதெல்லாம் தூக்கி நிறுத்த விஜய்க்கு ஒரு ரீ-மேக் படம் வேண்டும். அழகிய தமிழ் மகன், குருவி இரண்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனால் ரீ-மேக் சப்ஜெக்டில் கவனம் பதித்துள்ளார் விஜய்.
பிரபுதேவா விஜயின் அடுத்தப் படத்தை இயக்குகிறார். சிங்கம் என்று படத்துக்குப் பெயரும் வைத்தாகிவிட்டது. சிங்கம் உலவ காடு (கதை) வேண்டுமே?
இந்தி 'போக்கிரி'யை இயக்கிவரும் பிரபுதேவா, பாபிதியோல், ப்ரீத்தி ஜிந்தா நடித்த சோல்ட்ஜர் படத்தை விஜய்க்கு பரிந்துரை செய்துள்ளாராம். இதுவரை விஜய் தரப்பிலிருந்து பரிந்துரைக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்றாலும், சிப்புக் கொடியும் காட்டவில்லையாம்.