சிட்டியை கலக்கிகாண்டிருக்கும் கோல்டு குவெஸ்ட் தங்க மோசடி கோலிவுட்டை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கோடிக் கணக்கில் நடிந்த மோசடியில் பல நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதாம்.
முக்கியமாக நடிகர் அஜய் ரத்னம். கோல்டு குவெஸ்ட் தங்க நாணய திட்டத்தில் அஜய் ரத்னம் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அதேபோல், நடிகர் சங்கத் தேர்தலில் குட்டையை குழப்பும் நாடக நடிகை தேவியும் இதில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் மற்றொருவர், நடிகை சினேகா. அதேபோல் நடிகர் திலகத்தின் வாரிசு பெயரும் இதில் அடிபடுகிறது.
தங்க மோசடியில் ஈடுபட்டவர்களை பட்டியலிட்டு விசாரித்து வருகிறது காவல்துறை. விசாரணை அம்பு தங்கள் மீதும் பாயுமோ என நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் நட்சத்திரங்கள்.