நடிகைகளின் காதலுக்கு ஆயுள் ரேகை கம்மி. பெரும்பாலும் கல்யாணம் என்று வரும்போது ரேகை அழிந்துவிடும். ஒருசிலர்தான் விதிவிலக்கு. உதாரணம் சொல்வதென்றால் நடிகை மான்யாவை சொல்லலாம்.
'குஸ்தி', 'நைனா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மான்யா, சத்யா படேல் என்பவரை காதலித்து வந்தார். நடிகைகளின் குல வழக்கப்படி இவரும் ஒரு அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்.
இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆச்சரியப்படும்படி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் இம்மாதம் 31 ஆம் தேதி இருவரும் கல்யாண பந்தத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
நடிகைக்கு திருமணம் என்றதும் அடுத்துவரும் கேள்வி, திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா? மான்யாவின் பதில், கண்டிப்பாக! நல்லவேளை, கலையுலகம் பிழைத்தது.