எப்படியும் தனுஸ்ரீ தத்தாவின் கால்ஷீட்டை வாங்கிவிடுவது என்று தீவிரமாக முயன்றார் சரண். சமீப காலமாக அவரை பிடித்திருக்கும் சனீஸ்வரன் இதிலும் விளையாடிவிட்டார்.
முரளி மனோகர் தயாரிப்பில் 'மோதி விளையாடு' படத்தை இயக்குகிறார் சரண். வினய் ஹீரோ. ஹீரோயினாக சரண் தேர்வு செய்தது தனுஸ்ரீ தத்தா. மும்பை சென்று அவருக்கு கதை சொல்லவும் முயன்றார்.
இந்திப் படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லையென கைவிரித்திருக்கிறார் தத்தா. கனவு கலைந்த சோகத்துடன் இப்போது காஜர் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார்.