சென்னை திருவல்லிக்கேணி சென்றால் இயக்குனர் கே.வி. ஆனந்தையும், அயன் யூனிட்டையும் காணலாம். இரண்டு நாட்களாக அங்குதான் அயன் படப்பிடிப்பு.
ஏவி.எம். தயாரிப்பில் சூர்யா, தமன்னா நடிக்கும் அயன் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில் வரும் வில்லன் வீடு திருவல்லிக்கேணியில் இருப்பதாக காட்சி. இதற்காக திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் பழமையான ஒரு வீட்டைப் பிடித்திருக்கிறார்கள்.
நேற்று முழுவதும் வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் சம்பந்தப்பட்ட காட்சியை இங்கு படமாக்கினார் கே.வி. ஆனந்த். இன்று அதே வீட்டில் சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளது.
ஆக்சன் படமான அயனின் கதையை இரட்டை எழுத்தாளர்கள் சுபா எழுதியள்ளார்.