தசாவதாரத்திற்குப் பிறகு சரத்குமாரை இயக்குகிறார் கே.எஸ். ரவிகுமார். ராடானுடன் சன் டி.வி. இணைந்து படத்தை தயாரிக்கிறது.
அடுத்தவர்களின் கதையை படமாக்குவதே கே.எஸ். ரவிகுமாரின் பலம். இந்த முறையும் அடுத்தவரின் கதைதானாம்.
அமிதாப் பச்சன் வயதான வேடத்தில் நடித்த துஷ்யந்த் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சரத் வயதான வேடத்தில் நடித்த எல்லா படும் (விதிவிலக்கு நாடோடி மன்ன சூப்பர் ஹிட். அதனால் துஷ்யந்த் கதையையே தமிழில் எடுக்கிறார்களாம். முத்து, அவ்வை சண்முகி என ஏற்கனவே பல ரீ-மேக் படங்களை இயக்கியிருப்பதால், ராடானும், சன்னும் கே.எஸ். மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சரத்துக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். கதைப்படி இவர்களுக்கு டீன் ஏஜில் ஒரு மகள் உண்டு. அந்த அழகான மகளை தற்போது தேடி வருகிறார்கள்.