'ஜெயம் கொண்டான்' படத்தில் பாவனா முதன் முதலாக சொந்தக் குரலில் பேசியுள்ளார்.
இதுவரை மலையாளத்தில் மட்டும் சொந்தக் குரலில் பேசி நடித்து வந்த பாவனாவிற்கு தெற்கு தமிழில் பேச ஆசையாக இருந்ததாம். ஃபோர் ஃபிரேம் டப்பிங் தியேட்டரில் நடந்த குரல் தேர்வில் தேறிய பாவ், ஜெயம் கொண்டானில் அவர் நடித்த சில காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
"முதன் முதலில் தமிழில் பேசுவதால் வார்த்தைகள் உச்சரிப்பில் கவனமாக இருந்தேன். இனி எல்லாத் தமிழ்ப் படங்களிலும் நானே பேசுவேன்" என்றார் பாவனா.
ஜெயம் கொண்டான் ஆர். கண்ணன் இயக்கத்தில், வினய் கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ளது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.