புலன் விசாரணை-2

வெள்ளி, 2 மே 2008 (18:55 IST)
புலன் விசாரணை என்றால் ஆட்டோ சங்கர் கதையும், ஆட்டோ சங்கர் என்றால் புலன் விசாரணை படமும் ஞாபகத்திலவருமளவிற்கு பரபரப்பு ஏற்படுத்திய படம் விஜயகாந்தின் புலன் விசாரணை.

இப்போது ஆர்.கே. செல்வமணியின் கைவண்ணத்திலேயே புலன் விசாரணை-2 வெளிவரவுள்ளது. இராவுத்தர் ஃபிலிம்ஸ் தயாரிக்க புலன் விசாரணை-2 ன் பாடல் வெளியீட்டு விழா சென்ற வியாழன் சென்னையில் நடைபெற்றது.

தமிழக காவல் துறையில் ஒரு உயர் பதவி கொடுத்துவிடலாமா என காவல் துறையே யோசிக்கும் அளவிற்கு மிடுக்காலும், நடிப்பாலும் அசத்திய விஜயகாந்த் ரோலில் பிரசாந்த் நடித்துள்ளார்.

காதலுக்காக உருகி மருகும் கதாபாத்திரங்களில் மட்டுமே வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பிரசாந்துக்கு காக்கிச் சட்டை ஆக்டிங் கைகொடுத்தால் ரசிகர்கள் தப்பித்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்