திருச்சி விநியோகஸ்தர் ஆர். விஸ்வநாதன் பல திரைப்படங்களை வாங்கி திரையிட்ட அனுபவத்தில் சொந்தமாக படங்களைத் தயாரிக்க முடிவு செய்து தன் மகன் பரதன் பெயரில் பரதன் ஃபிலிம்ஸ் என்று ஆரம்பித்து அவரையே ஹீரோவாக வைத்து 'நீ நான் நிலா' என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.
அந்தப் படம் சரியாக போகாத காரணத்தால் கொஞ்சம் பாப்புலரான ஹீரோவை வைத்து தயாரித்தால் கம்பெனியின் பெயரை பிரபலமாக்கலாம் என்று முடிவு செய்து 'கெட்டவன்' படத்தை சிம்புவை வைத்து ஷூட்டிங்கும் ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு மூன்று கோடி ரூபாய் செலவும் செய்யப்பட்ட பின் சிம்புவுக்கும், அதில் ஹீரோயினியாக சிம்புவால் தேர்வு செய்யப்பட்ட எஸ்.எஸ். மியூசிக் காம்பேரிங் லேகாவுக்கும் பிரச்சனை ஆரம்பமானது.
லேகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று குற்றம் சொல்லி, வேறு நாயகியை வைத்து 'ரீ ஷூட்' செய்ய வேண்டும் என்று சிம்பு அடம்பிடிக்க, தயாரிப்பாளர் ஆர்.வி. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
பொருத்திருந்து பார்த்த தயாரிப்பாளர் இதுவரை செலவு செய்த மூன்று கோடிக்கும் சேர்த்து வட்டியோடு பணத்தை வைத்துவிட்டு 'கெட்டவனை' நீயே பண்ணிக்கொள் என்று தீர்மானமாகச் சொல்ல, வட்டியோடு பணத்தை கொடுத்துவிட்டுத்தான் கெட்டவனை தன்னுடைய சிம்பு சினி ஆர்ட்சுக்கு மாற்றினார்.
அத்தோடு 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடித்த ஜெனிலியா மற்றும் தமன்னா ஆகியோரிடமும் கால்ஷீட் மேகட்டுள்ளார்.