இந்தியாவுக்குள் காலடி வைக்கும் வார்னர் பிரதர்ஸ்!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:17 IST)
சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகள் செளந்தர்யா. சூப்பர் ஸ்டாரைப் போல எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், துடிப்பும் மிக்கவர். பட இயக்கம் மற்றும் தொழில் வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்.

இவர் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தன் தந்தை ரஜினியை வைத்து உருவாக்கிய 'சுல்தான்' அனிமேஷன் படம் ஆரம்பிக்கும்போதே ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது. அதேபோல், பல நாடுகளிலும் பேசப்பட வைத்தவர். இவரின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் தீணி போடும் வகையில் கைகோர்த்துள்ளது வார்னர் பிரதர்ஸ்.

ஹாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்த இந்நிறுவனமும், செளந்தர்யாவின் 'ஆக்கர்' ஸ்டுடியோவும் இணைந்து பல்வேறு மொழிகளில் படங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் படங்களைத் தயாரிக்க கார்ப்ரேட் கம்பெனிகள் முளைத்து வரும் இந்நிலையில், ஹாலிவுட் பட நிறுவனமும் இந்தியாவில் காலூன்ற முடிவு செய்துள்ளது. இதனால் பல்வேறு இயக்குனர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வேலை கிடைப்பதோடு, தரமான படங்களையும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்