இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் படம் 'குசேலன்'.
ஆரம்பத்தில் அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்று அறிக்கைவிட்டார். பின் பி. வாசு மற்றும் தயாரிப்பாளர்கள் ஓடோடிச் சென்று அவரை நேரில் சந்தித்து பேச, 'சும்மா கெஸ்ட் ரோலில் மட்டும் நடிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று சீன்களில் மட்டும்தான் நடிக்கிறேன்' என்றார்.
மீண்டும் பட நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற அமிறக்கையால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, 'குசேலன்' சம்பந்தமாக எதுவும் பேசாமல் இருந்தார் சூப்பர் ஸ்டார்.
இதை சாதகமாக்கி ரஜினிக்கான படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் கொஞ்சம் நீட்டிப்பு செய்ததோடு ரஜினி தோன்றும் முதல் காட்சியை ஒரு பாடலாக எடுக்கவும் முடிவு செய்தார் இயக்குனர்.
இதனால் அவசரமாக கவிஞர் வாலியிடம் பாடல் கேட்டு வாங்கி, ஜி.வி. பிரகாஷ் குமாரிடம் டியூன் போடச் சொல்லி சந்தடியில்லாமல் பாடலையும் எடுத்து முடித்துவிட்டார் பி. வாசு.
திறமையுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது இதுதானோ!