ஆரம்பத்திலேயே இப்படி பயமுறத்துகிறார் 'மாணவன் நினைத்தால்' படத்தின் இயக்குனர் ஞானமொழி. ஒரு மாணவன் என்றால் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்று இரண்டு வகையாகவும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்களான ரிதீஷ் - ஆதிரா இருவரும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.
இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாகவும், மிகுந்த வரவேற்பையும் பெறும் என்கிறார் இயக்குனர். அது மட்டுமில்லாமல் சாதாரண நகைச்சுவை நடிகராக ஒன்றிரண்டு சீன்களில் நடித்து வந்த கொட்டாச்சிக்கும் நல்ல குணச்சித்திர வேடம் கொடுத்திருக்கிறேன். அவர் அருமையாக நடித்திருக்கிறார் என்று பாராட்டுகிறார்.
மற்றொரு சிறப்பாக இந்தப் படத்தில் இசையமைப்பாளர் 'தஷி' சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும், கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றிருக்கிறார். இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த 'மாணவன் நினைத்தால்' படம் மக்கள் மனதிலும் சிறப்பு பெறுமா? ரிலீஸ¤க்குப் பின் பார்ப்போம்.