நடிகர்களாக திரையில் அறிமுகமானவர்களைவிட, இயக்குனராக அறிமுகமானவர்களே நடிப்பில் சிரத்தை காட்டுகிறார்கள் என்று முணுமுணுப்பு. உண்மையா என்று பார்த்தால், நூறு சதம் சரி.
யோகிக்காக உடல் இளைத்து, தலைமயிரின் கலர் தொலைத்து நிற்கிறார் அமீர். எஸ்.ஜே. சூர்யா ஒட்டவெட்டிய முடியும் சிங்கப் பார்வையுமாக சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார். இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறவர் சமுத்திரக்கனி.
சுப்ரமணியபுரம் படத்தில் எண்பதுகளின் ஸ்டெப் கட்டிங்குடன் லாம்பி ஸ்கூட்டரில் வலம் வருகிறவர் அடுத்து நாடகம் என்றொரு படத்தை இயக்குகிறார். நடிப்பும் இவரே. படத்தில் இவருக்கு இரண்டு வேடங்கள்.
ஒரு வேடத்துக்காக ஏழு கிலோ குறைந்து 75 கிலோவாகியிருக்கிறார். இன்னொரு கேரக்டர் கொஞ்சம் குண்டு. அதிகமில்லை 150 கிலோதான்!
இந்த வேடத்திற்காக குறைந்த எடையை கூட்டப் போகிறாராம்.