விக்ரமை கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தியதில் தரணியின் 'தில்', 'தூள்' படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருவரும் இணைந்தால் இமாலய வெற்றி என்றொரு எண்ணம் விநியோகஸ்தர்களுக்கு.
அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் இணைகிறது விக்ரம், தரணி கூட்டணி.
கந்தசாமி படத்தில் நடித்துவரும் விக்ரம், அடுத்து மணிரத்னம் இயக்கும் இருமொழிப் படத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி இருமொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், தமிழில் விக்ரம் நடிக்கிறார்.
இது தவிர பாலா, அமீர், கே.எஸ். ரவிக்குமார், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார். அத்துடன் தரணிக்கும் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடிக்கும் விக்ரமின் ரசிகர்களுக்கு நிச்சயம் இது சர்க்கரை செய்திதான்!