வில்லனாக அறிமுகமானவர்கள் வேகமாக கதாநாயகனாகி வருகிறார்கள். காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த டேனியல் பாலாஜியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த படம் வேட்டையாடு விளையாடு. இதில் அவரது வில்லத்தனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
பொல்லாதவன் படம், சினிமாவில் அவருக்கு நிரந்தர இடத்தை தேடித் தந்தது. நாயகன் வேடமெல்லாம் வேண்டாம், வில்லனே போது என்று வள்ளலார் மனநிலையில் இருந்தவரை வலிய தேடி வந்திருக்கிறது ஹீரோ வாய்ப்பு.
மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ், மும்பை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தயாரிக்கும் படம் முத்திரை. டேனியல் பாலாஜி ஹீரோ. இன்னொரு நாயகன் நித்தின் சத்யா. படத்தை ஜீவாவின் உதவியாளர் ஸ்ரீநாத் இயக்குகிறார்.
நாயகனாக நடித்தாலும் நம்முடையது வில்லன் ஏரியா என்பதில் மாற்றமில்லாமல் இருக்கிறார் டேனியல்.