இன்று விக்ரமுக்கு பிறந்தநாள். எத்தனையாவது பிறந்தநாள்? அதை கேட்பது நகாரிகமில்லை. ஆனால், பிறந்தநாளுக்கு என்ன செய்கிறார், அதுதான் முக்கியம்.
விரைவில் தனது பெயரில் பவுண்டேஷன் ஒன்றை ஆரம்பிக்கிறார் விக்ரம். அதன் ஒரு பகுதியாக செயல்பட இருக்கிறது காசி கண் வங்கி.
காசியில் கண் தெரியாதவராக நடித்தபோது கண் தெரியாததன் வலியை உணர்ந்திருக்கிறார் விக்ரம். அதன் வெளிப்பாடுதான் இந்த காசி கண் வங்கி.
இன்று தனது பிறந்தநாளில் கண் தானம் செய்கிறார் விக்ரம். அவருடன் அவரது ரசிகர்கள் 1001 பேரும் கண் தானம் செய்கிறார்கள். பிறந்த நாளுக்கு இதைவிட பெரிய ஆசை இந்த சமூகத்துஐக்கு யாரும் தந்துவிட முடியாது.