தொடர்ச்சியாக நான்கு வெற்றிகள். அதுவும் தம்பியை வைத்து சந்தோஷ் ராஜாவாக இருக்கிறார் சந்தோஷ் சுப்ரமணியத்தின் இயக்குனர் எம். ராஜா.
சனிக்கிழமை வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக ஜெனிலியாவின் கேரக்டர். அந்தக் கதாபாத்திரத்துக்காகத்தான் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டேன் என்கிறார் ராஜா. குரலில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்த நிறைவு.
வார இறுதி கலெக்சனில் சந்தோஷ் சுப்ரமணியமே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொட்டுத் தொடர்ந்து வரும் படம் பரத்தின் 'நேபாளி'. பரத் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்த க்ரைம் த்ரில்லருக்கு மவுத் பப்ளிசிட்டி நெகடிவ்வாகவே உள்ளதால், முதலிடத்தை சந்தோஷ் சுப்ரமணியமே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்கிறார்கள் விநியோகதஸ்தர்கள் தரப்பு.
நான்கு ரீ-மேக் படங்களை தொடர்ச்சியாக இயக்கி, நான்கையும் வெற்றிபெற வைத்த ஒரே இயக்குனர் என்ற சாதனையையும் சந்தோஷ் சுப்ரமணியம் மூலம் புரிந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.