எஸ்.ஐ. செலக்ஷனில் தோற்றுப் போவதாக அஞ்சாதேயில் நடித்த அஜ்மல் எஸ்.ஐ. ஆனது போல சந்தோஷமாக இருக்கிறார்.
கொச்சியை சேர்ந்த அஜ்மல் அமீர் நடித்த முதல் படம் 'பிரயை காலம்'. படிக்கிற காலத்திலேயே இவர் கமலின் தீவிர ரசிகராம். வெறியர் என்றும் சொல்லலாம்.
கலையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் அஜ்மலும் கலந்து கொண்டார். மேடையில் அவரை அடையாளம் கண்டுகொண்ட கமல், அஞ்சாதேயில் நன்றாக நடித்திருந்ததாக அஜ்மலை பாராட்டியிருக்கிறார்.
கமலை அருகில் பார்த்ததே சந்தோஷம் என்றிருந்தவருக்கு, அவர் பாராட்டியது, பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது போல் பரவசமாகிவிட்டது. போகிற வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லி சொல்லி பூரிக்கிறார் அஜ்மல்.