அமீருக்கு எதுவும் யதார்த்தமாக இருக்க வேண்டும். இந்த அதிகப்படியான அக்கறை அவரை படுக்கையில் கிடத்தியுள்ளது.
சுப்ரமணியம் சிவாவின் யோகியில் சென்னை நகர தாதாவாக நடித்து வருகிறார் அமீர். நேற்று சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. காட்சிப்படி நாற்பதடி உயரத்திலிருந்து அமீர் குதிக்க வேண்டும்.
டூப் போடலாம் என்பதை கேட்காமல் அமீரே குதித்துள்ளார். தரையில் லேண்ட் ஆன போது தவறி வலது கையை தரையில் ஊன்ற, கை எலும்பு முறிந்திருக்கிறது.
இப்போது மாவு கட்டுடன் ஓய்வு எடுத்து வருகிறார் அமீர். படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.