வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (15:10 IST)
இன்று கோலிவுட். நாளை பாலிவுட். அப்படியே கோடிகளில் சம்பளம்! இன்றைய சராசரி நடிகைகளின் ஆகப் பெரிய லட்சியம் இது.
இந்த ஒன்றையடிப் பாதையிலிருந்து விலகி சிந்திக்கும் நடிகைகள் சொற்பம். அந்த சொற்பத்தில் ஒருவர் அனுயா.
விகடன் குழுமம் முதன் முதலாக தயாரிக்கும் சிவா மனசுல சக்தி படத்தின் நாயகி. வடக்கிலிருந்து வந்தாலும், கமல்ஹாசன் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குவதைவிட, நல்ல நடிகை என பெயர் வாங்குவதே இவரது விருப்பமாம். சுருக்கமாகச் சொன்னால், பொம்பளை கமல் என்று பெயர் வாங்க வேண்டுமாம்.
பொம்பள கமல் என பெயர் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இன்னொரு நடிகை பூர்ணிதா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பூர்ணிதாவுக்கு இன்னும் தனது திறமையை பூரணமாக வெளிப்படுத்தும் வேடம் கிடைக்கவில்லை. விரைவில் கிடைத்து பொம்பள கமல் பட்டம் பெற வாழ்த்துவோம்!