ஒயாம சீயா ஓயி யாயா... என்று காக்க காக்க படத்தில் புரியாத மொழியில் பாடல் வைப்பதை ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கி வைத்தார். அதனை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி!
டிஷ்யூம் படத்தில் இவர் எழுதி இசையமைத்த டைலாமோ பாடல் சூப்பர் ஹிட். இன்று வரை டைலாமோவுக்கு அர்த்தம் யாருக்கும் தெரியாது. எழுதிய அவருக்கே தெரியாது.
அதேமாதிரி காதலில் விழுந்தேன் படத்துக்கு அவர் இசையமைத்த நாக்க முக்க என்ற பாடல் மானாட மயிலாட, சூப்பர் டான்சர்ஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது.