ரஜினி- வெட்டப்படும் காய்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (20:50 IST)
விளையாட்டில் இருக்கிறாரா? இல்லையா? எதுவாக இருந்தாலும் சதுரங்கத்தில் எப்போதும் வெட்டப்படும் காய் ரஜினி!
ஒகேனக்கல் பிரச்சனை தமிழ்நாடு, கர்நாடகா சம்பந்தப்பட்டது. தமிழ்த் திரையுலகினரின் உண்ணாவிரதத்தில் ரஜினி கலந்து கொண்டதற்கு தமிழ்த் திரையுலகம் கருத்துத் தெரிவிக்கலாம். அத்துமீறினாலும் கர்நாடகாவிற்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், மராட்டியம்?
சிவசேனாவின் அதிகாரப்பூர்வப் பத்திரிகையான 'சாம்னா', ரஜினிகாந்த் பிறந்தது கர்நாடகமாக இருந்தாலும் பூர்வீகம் மராட்டிய மாநிலம். ஆனாலும், வாழ்வதும் வளம்பெறுவதும் தமிழகத்தில். ஒகேனக்கல் பிரச்சனையில் தன்னை வாழவைத்த தமிழ் நாட்டிற்காக கர்நாடக அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார் ரஜினி எனச் செய்தி வெளியிட்டிருக்கிறது. எதற்கு?
உத்தரப்பிரதேசத்தில் பிறந்த அமிதாப்பச்சன், தன்னை வளர்த்து ஆளாக்கிய மராட்டியத்திற்கு விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக.
நகைச்சுவை என்னவென்றால், நான் என்ன அப்படி அவிசுவாசமாக என்ன செய்தேன் என்று உண்மையிலேயே புரியாமல் புலம்புகிறார் அமிதாப். அந்தக் கருத்து சிவசேனா பத்திரிகையின் கருத்தே அன்றி என்னடையது அல்ல என்று டபாய்க்கிறார் பால் தாக்ரே.
இந்தப் பனிப்போரின் பாடு பொருளாகி இருக்கிறார் ரஜினி. பாவம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல.