சென்னையில் ஐரோப்பிய யூனியன் பட விழா!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (18:42 IST)
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) டெல்லி ஐரோப்பிய யூனியன் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து திரைப்பபட விழாவை நடத்துகிறது.

இன்று தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவை ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆண்டன் கோகலா தொடங்கி வைக்கிறார். இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

இந்த 13வது ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழாவில் ஐரோப்பாவைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

தொடக்க விழாவில் ·பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், நடிகை த்ரிஷா, சாய்மீரா நிறுவனத் தலைவர் பி.எஸ். சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தத் திரைப்பட விழாவில் மொத்தம் 20 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஸ்லோவேனியா, பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்ட்ரியா முதலிய நாடுகளின் திரைப்படட்ஙகள் இதில் இடம்பெறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்