கே. ராஜேஷ்வர் இயக்கும் இந்திர விழாவில் ஸ்ரீகாந்த், நமிதா நடிக்கின்றனர். முக்கியமான வேடம் ஒன்றில் மாளவிகா நடிப்பதாக இருந்தது.
அவர் கர்ப்பமாக இருப்பதால், இந்திரவிழாவில் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாயின. இதற்குப் பதிலளித்த மாளவிகா, இந்திர விழாவில் கண்டிப்பாக நடிப்பேன். நான் கர்ப்பமாக இருப்பதை இன்னும் உறுதி செய்வில்லை என்றார்.
இந்நிலையில் இந்திர விழாவில் மாளவிகாவுக்கு பதில் சொர்ணமால்யா ஒப்பந்தமாகியுள்ளார். அப்படியானால் மாளவிகா?