திசை மாறிய புயல்!

சனி, 5 ஏப்ரல் 2008 (18:45 IST)
சுந்தர் சி-யிடமிருந்து சுராஜுக்கு கியரை மாற்றியிருக்கிறார் வடிவேலு.

வடிவேலு காமெடியில் கைப்புள்ளதான் டாப். சுந்தர் சி. படமென்றால் வடிவேலுவின் காமெடிக்கு தனி ஸ்டைல் வந்துவிடும். தாயா புள்ளையா இருந்தவர்கள் நடுவில் எப்படியோ நுழைந்தது ஈகோ தகராறு. சுந்தர் சி இறங்கி வந்தும் இறுக்கம் குறையவில்லை வடிவேலுவிடம்.

தலைநகரம் படம்தான் சுந்தர் சி, வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த கடைசிப் படம். படத்தை இயக்கியவர் சுந்தர் சி-யின் உதவியாளர் சுராஜ்.

குருவுக்கு ஒத்துவராத வடிவேலு சிஷ்யனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். சுராஜின் இரண்டாவது படம் 'மருதமலை'யிலும் நடித்தார் வடிவேலு. அவரது சிரிப்பு போலீஸ் கேரக்டருக்கு எல்லா திரையரங்குகளிலும் சிரிப்பலை.

இந்திரலோகம் தந்த சிராய்ப்பை மறக்க, மீண்டும் காமெடியில் கவனம் செலுத்தும் வடிவேலு, சுராஜின் புதிய படமான படிக்காதவனிலும் நடிக்கிறார். இதில் ஹீரோ தனுஷ். முதலிரண்டு படங்களைப் போல இதிலும் ஹீரோவுடன் படம் முழுக்க வரும் கேரக்டராம். பிச்சு உதறுவார் என்பதில் சந்தேகமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்