கே.எஸ். துரைக்கு திருவள்ளுவர், திருமூலர் என்றால் கொள்ளை பிரியம். சலிக்காமல் சாயங்காலம் வரை பேசுவார். இவர் தமிழ்நாட்டின் ஏதோ தமிழறிஞர் என்று நினைத்தால் ஏமாந்தீர்கள்.
இவர் ஒரு ஈழத் தமிழர். டென்மார்க்கில் வசிக்கிறார். பலரும் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழ்ப்படம் எடுக்கும்போது கே.எஸ். துரை டென்மார்க்கிலேயே தமிழ்ப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.
டென்மார்க்கில்தான் மொத்த படப்பிடிப்பும் நடைபெறுகிறது. படத்தின் ஹைலைட் திருவள்ளுவர். பிரமாண்ட திருவள்ளுவர் சிலை ஒன்றை டென்மார்க் தீவு ஒன்றில் நிறுவி, படப்பிடிப்பு நடத்தப் போகிறாராம் கே.எஸ். துரை.