கேயாருக்கு மேலுமொரு பதவி!

சனி, 5 ஏப்ரல் 2008 (18:39 IST)
ராடான் நிறுவனத்துடன் இணைந்து படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்குகிறது சன் டி.வி.!

இவர்கள் அட்வான்ஸ் கொடுத்திருப்பவர்கள் செல்வராகவன், சூர்யா, கெளதம் மேனன், தனுஷ் என்று எல்லோருமே முதல் வரிசை கலைஞர்கள்.

ஒரேயொரு பிரச்சனை. இந்தப் படங்களை தயாரிக்க, நிர்வாகத் தயாரிப்பில் நாலும் தெரிந்த நேர்மையான ஒருவர் வேண்டும். தமிழ் சினிமாவில் நாலும் தெரிந்தவர்கள் நிறைய. ஆனால் நேர்மையானவர்?

கடைசியில் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கிடைத்திருக்கிறார் கேயார். தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பல முகங்கள் கொண்ட கேயார், இனி ராடான், சன் டி.வி. கூட்டுத் தயாரிப்பின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்வார்.

வெப்துனியாவைப் படிக்கவும்