சனி, 5 ஏப்ரல் 2008 (17:46 IST)
தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், பல நடிகைகளின் கனவு திசை பாலிவுட்.
அசின், ஸ்ரேயா இருவரும் பாலிவுட்லிருந்து அழைப்பு வந்து சென்றவர்கள். தமிழில் கேட்கிற சம்பளம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு சென்றவர் சதா.
Raja Bundela இயக்கும் 'தில் டூ தீவானா ஹேய்' படத்தில் சதா ஹீரோயின். ஜூன் எட்டாம் தேதிய இப்படம் திரைக்கு வருகிறது. படம் வெளி வந்தால் இந்தியில் நிரந்தரமாக டெண்ட் அடித்து தங்கலாம் என்ற கனவில் இருக்கிறார், இந்த அந்நியன் ஹீரோயின்.
ஆனந்த்ராஜ் ஆனந்த் மியூசிக் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சதா ஹீரேயின் என்றாலும், அவரை ஒரு பொருட்டாக யாரும் நினைக்கவில்லை. படத்தில் இன்னொரு இணை இடம் பெறுகிறது. ஜீனத் அமன்- ராஜ் பப்பர்.
இவர்களைக் குறித்துதான் அதிகம் எழுதுகின்றன மும்பை பத்திரிகைகள். சதாவுக்கும் இது தெரியும். ஒப்புக் கொள்ளதான் சதாவுக்கு இல்லை பரந்த மனசு!