மீண்டும் காதலுக்கு மரியாதை கூட்டணி!
சனி, 5 ஏப்ரல் 2008 (17:45 IST)
இளையராஜா இசையமைக்கும் 'அழகர்மலை' க்கு ஒரு சிறப்பு உண்டு.
தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம் இருக்கிறதோ தெரியாது. ஆனால், விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் 'காதலுக்கு மரியாதை'.
மலையாளத்தில் குஞ்சாகா போபன், ஷாலினி நடித்த 'அனியத்தி புறாவு' படத்தை பாசில் தமிழில் 'காதலுக்கு மரியாதை' என்ற பெயரில் ரீ-மேக் செய்தார். மலையாளம், தமிழ் இரண்டிற்கும் இசையைத்தவர் இளையராஜா.
தமிழில் 'காதலுக்கு மரியாதை'யை தயாரித்தவர் சங்கிலி முருகன். ஏறக்குறைய பத்து வருடங்களாக தயாரிப்பிலிருந்து விலகி, ஜெயம் கம்பெனியின் நிர்வாக பொறுப்பை பார்த்துக் கொண்டவர், தயாரிக்கும் படம்தான் 'அழகர் மலை'.
'காதலுக்கு மரியாதை' படத்தில் பாடல்கள் எப்படி பேசப்பட்டனவோ, அப்படி 'அழகர் மலை' பாடல்களும் ஹிட்டாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.
மதுரை, தேனி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் 'அழகர் மலை'யில் 'தூண்டில்' வில்லன் ஆர்.கே.நாயகனாக நடிக்கிறார்.