சிங்கம் இந்த முறை சிங்கிளாக வரவில்லை. பெரும் கூட்டத்துடன் வருகிறது. குறைந்தகால தயாரிப்பு என்று சொல்லித்தான் 'குசேலன்' படத்தை ஆரம்பித்தார்கள். ரஜினி பெயரை அறிவித்ததுமே, கலைடாஸ்கோப் போல அப்படியொரு மாற்றம்.
ரஜினி, பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேலு... என்று இரண்டு டஜன் நடிகர்கள் குசேலனில் தற்போது நடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ரஜினியின் ரசிகர்கள் நிறைந்த இன்னொரு தேசம் ஜப்பான். அங்குள்ள ரசிர்களை கவர, ஓரிரு காட்சிகளில் ரஜினி ஜப்பான் நாட்டு நடிகர்களுடன் தோன்றுகிறாராம்.
கதையை நன்றாக எழுதுகிறாரோ இல்லையோ, கமர்ஷியலை சரியான விகிதத்தில் கலப்பதில் பி. வாசு ஒரு பி.ஹெச்டி. அவரது ஐடியாதானாம் இந்த ஜப்பான் நடிகர்கள்.
ஆக, இந்தமுறை சிங்கம் சிங்கிளாக வரவில்லை. ஜப்பான் சிறுத்தைகளுடன் சேர்ந்து வருகிறது.