மிஷ்கினின் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் யார் நடிக்கிறார்கள்? சரியான பதில் சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று திருவிளையாடல் பாணியில் அறிவித்துவிடலாம். அப்படியும் விடை கிடைக்குமா என்பது சந்தேகம்.
நேற்று வரை குழப்பமில்லை. சூப்பர் ஹீரோ விஷால், தயாரிப்பது விக்ரம் கிருஷ்ணா என்று பக்கா க்ளீன். விஷால் படத்திலிருந்து விலகிக் கொண்டதும் ஆரம்பித்தது குழப்பம். இப்போது விஷாலுக்கு பதில் சூர்யாவின் பெயர் அடிபடுகிறது. ராடான் நிறுவனமும், சன் டி.வி.யும் இணைந்து படத்தை தயாரிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதில் சொல்ல வேண்டிய மிஷ்கின் வேறொரு பரபரப்பில் இருக்கிறார். அடுத்து இயக்கும் நந்தலாலாவில் யாரை ஹீரோவாகப் போடுவது? இல்லை நாமே நடிக்கலாமா? மிஷ்கினின் இந்த குழப்பம் தீர்ந்தால் மட்டுமே நந்தலாலா முன்னோட்டு நகரும்.
குழப்பங்கள் பல இருந்தாலும் 'நச்'சென்று நல்லதொரு படம் தருவார் என்பதை மட்டும் குழப்பமே இல்லாமல் நம்பலாம்!