சொந்தமாக டி.வி. வைத்திருப்பது போல், ஆளுக்கொரு சொந்த டி.வி. சானல் தொடங்குகிறார்கள். தங்கபாலு, வசந்த் இருவரையும் தொடர்ந்து விரைவில் விஜயகாந்தும் சானல் ஒன்றுக்கு ஓனராகிறார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் நாடக நடிகருமான எஸ்.வி. சேகரும் இரண்டு டி.வி. சானல்கள் தொடங்க திட்டமிட்டுள்ளார். சானல்களுக்கு பெயர்களும் தயார். ஒன்று எஸ்.வி. டி.வி., இன்னொற்கு இந்தியா டி.வி.. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறும் எஸ்.வி. சேகர், வழக்கமான பிற நிகழ்ச்சிகளும் இந்த சானல்களில் இடம்பெறும் என்றார்.
இன்னும் பத்து மாதங்களுக்குள் இரண்டு சானல்களையும் வெள்ளோட்டம் விடுவேன் என்றிருக்கிறார் எஸ்.வி. சேகர்.