இதுவரை ஏற்காத வேடம் ஒன்றிற்கு தயாராகிறார் மாளவிகா. இது ரீல் லைஃப் வேடம் அல்ல, ரியல் லைஃப் வேடம்.
'இந்திர விழா' உட்பட சில படங்களில் நடிக்க மாளவிகாவுக்கு வாய்ப்புகள் வந்தன. வழக்கமாக அட்வான்ஸ் வாங்குகிறவர், கொஞ்சம் பொறுங்கள் என வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் வாய்ப்புகளை.
மாளவிகா கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த வெயிட்டிங் என்கின்றன தகவல்கள். மாளவிகாவும் இதனை மறுக்கவில்லை. மெடிக்கல் செக்கப்பிற்குப் பிறகு சொல்கிறேனே என்கிறார்.
வாளமீனுக்கு கல்யாணம் என்று இடையை ஆட்டியவர் இனி தொட்டிலையும் ஆட்ட வேண்டும்.