நான்கு கோடி பட்ஜெட். இது படம் தொடங்குவதற்கு முன். படம் முடியும் போது பட்ஜெட் 22 கோடி! 'சத்யம்' படத்துக்கு தான் இப்படி பணத்தை தண்ணீராக இறைத்திருக்கிறார்கள்.
கன்னட ஹீரோ உபேந்திரா இதில் வில்லனாக நடிக்கிறார். அதேபோல் மயூரி சுதாசந்திரனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சத்யம் படத்தில் நடித்துள்ளார்.
இதில் அவருக்கு விஷாலின் அம்மா வேடமாம். மன்னன் பண்டரிபாய் போல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்துள்ளாராம். சத்யம் படத்தின் ஹைலைட் சமாச்சாரங்களில் இந்த கேரக்டரும் ஒன்று என்கிறது ஸ்டுடியோ வட்டாரங்கள்.
நடிப்புதான் என்றாலும் ஒரு பரதநாட்டிய கலைஞரை பக்கவாத கேரக்டரில் நடிக்க வைத்து அவரது அபிநயத்தை முடக்கலாமா?