பரத் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். மீராஜாஸ்மின் நாயகி. சர்ச்சை சங்கீதாவும் உண்டு. எட்டு திசையிலிருந்து பார்த்தாலும் வித்தியாசமாகவே இருக்கிறது நேபாளி.
பழனிக்குப் பிறகு வெளியாகும் பரத்தின் நேபாளி விற்பனை அதன் உச்சம் தொட்டிருக்கிறது. உபயம், ரிலையன்ஸ் குருப்.
கிரீடம் படத்தில் இணை தயாரிப்பாக தமிழில் காலடி எடுத்து வைத்தது ரிலையன்ஸின் அட்லாப்ஸ். பிறகு நேரடியாக படத் தயாரிப்பில் இறங்கியது. நேபாளி படத்தை வாங்கியதன் மூலம் விநியோகஸ்தராகவும், தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளது.
போட்டி நிறைந்த சென்னை புறநகர் பகுதியின் விநியோக உரிமையை ஒரு கோடியே நாற்பது லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறது அனில் அம்பானியின் அட்லாப்ஸ் நிறுவனம். மதுரை விநியோக உரிமையையும் அட்லாப்ஸே கைப்பற்றியிருக்கிறது. கொடுத்த தொகை 90 லட்சங்கள்.
பரத்தின் திரை வாழ்க்கையில் ஒரு படம் இத்தனை அதிக தொ¨க்கு வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.