சண்டயில் சங்கமித்த சுந்தர் சி, ஷக்தி சிதம்பரம் கூட்டணி மீண்டும் இடியில் ஒன்று சேர்கிறது.
சென்ற மாதம் வெளியான படங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது சண்ட. விமர்சன ரீதியாக பெயர் வாங்கிய வெள்ளிளத்திரை, கண்ணும் கண்ணும், அஞ்சாதே படங்களை இந்த கமர்ஷியல் காக்டெயில் கலெக்சனில் முந்தியிருக்கிறது.
சண்டயை தொடர்ந்து மீண்டும் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில்¨ நடிக்கிறார் சுந்தர் சி. படத்துக்கு இடி என்று பெயர் வைத்துள்ளனர். பெயரை வைத்தே இதுவுமொரு ஆக்சன் படமென்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சண்டயில் நமிதா நடித்திருந்தும் நதியாவுக்குதான் முக்கியத்துவம். போஸ்டரிலும் சுந்தர் சி-க்கு இணையாக முகம் காட்டியவர் நதியா. இதில் நமிதாவுக்கு வருத்தம்.
வருத்தத்துக்கு வடிகால் ஏற்படுத்தும் விதமாக இடியில் நமிதாவை நாயகியாக்க தீர்மானித்திருக்கிறார்களாம். இசை. டி. இமான். சண்டயை தயாரித்த ஷக்தி சிதம்பரத்தின் சினிமா பாரடைஸ் நிறுவனமே இடியை தயாரிக்கிறதாம்.