செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:13 IST)
பத்து கெட்டப்பில் தசாவதார நாயகன் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, நடிகர் ஷாம் தான் நடிக்கும் 'சிவ மயம்' படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்றி நடிக்கிறார்.
தனக்கொரு திருப்புமுனையாக அமையும் என்று ஷாம் கூறும் இப்படத்தை சஞ்சய்தாம் தயாரித்து இயக்குகிறார்.
தமிழருவி என்ற தாதா கேரக்டரில் பிரகாஷ் ராஜின் நடிப்பு ரசிகர்களுக்கு தீனியாய் அமையுமாம். தேவிகா என்னும் புதுமுகத்தை அறிமுகம் செய்யும் சஞ்சய்தாம் 'சிவ மயம்' ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்கிறார். ஜூலைக்கு திரைக்கு வரவிருக்கும் 'சிவ மயம்' ஏகப்பட்ட எதிர்பாப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது.