திங்கள், 31 மார்ச் 2008 (17:43 IST)
நமீதா ரொம்பவேதான் பந்தா காட்டுகிறாராம். இவர் நடிக்கவிருந்த 'மின்னலடிக்குது' படத்திற்கான ஃபோட்டோ செஷன் முடிந்து ரொம்ப நாளாகக் கிடப்பில் இருக்கிறது.
இதன் இயக்குநர் காளிமுத்து பட வேலையில் மும்முரம் காட்டத்துவங்க, அம்மணியோ சம்பள விவகாரத்தில் முரண்டு பிடிக்கிறாராம்.
முன்பு பேசியபடி சம்பளத்தைத் தருவதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். ஆனால் நமீதாவோ 'அழகிய தமிழ் மகன், பில்லாவிற்குப் பிறகு என் ரேஞ்சே வேற' என்கிற மாதிரி உதார் காட்டுறது ரொம்பவே டூமச் என்கிறது இயக்குநர் தரப்பு.
ஏற்கெனவே நமீதா ஹீரோயினாக நடித்த 'மாயா' என்றொரு படம் பெட்டிக்குள் கிடக்க, இந்த மாதிரி ஏடாகூடம் பண்றது எதற்கு?
சினிமாவுல இதெல்லாம் சகஜம்பா!