'கண்ணதாசன் காரைக்குடி' பாடல் மூலம் பாடகரான இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்தபடமான 'நந்தலாலா'வில் ஹீரோவாகிறார் என்ற பரபரப்புச் செய்திக்கு மறுப்பாகத் தலையசைக்கிறார்.
"நந்தலாலாவில் நான் ஹீரோ கிடையாது. ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறேன். குழந்தைகளைப் பற்றிய என்னுடைய இந்தப்படம் முந்தைய படங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு இருக்கும். ஆறுவயது குழந்தையை மையமாக வைத்து சுழலும் கதை. அந்த குழந்தையோடு உடன்வரும் ஒரு கதாபாத்திரம் தான் எனக்கு" என்று ஆச்சர்யத்தில் நம்மை அமிழ்த்துகிறார்.
பாடகராக ரசிகர்களை திருப்திப்படுத்திய இயக்குநர் நடிப்பாலும் நங்கூரம் பாய்ச்சிடுவார் என்று நம்புவோம்.